கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் – சுற்றிவளைத்த பொலிஸார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஒருவரே கைது செய்யபபட்டுள்ளது.
சந்தேகநபரின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெளிநாட்டுத் தயாரிப்பிலான 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 26 times, 1 visits today)