வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் : ஹிஸ்புல்லா அமைப்பின் அதிரடி நடவடிக்கை!

லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது.
அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஒருவர் உயிரிழந்ததன் அடிப்படையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இஸ்ரேல் தனது “அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு” ராக்கெட் தாக்குதல்களை இடைமறித்ததாகக் கூறுகிறது.
ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மத்திய கிழக்கில் போர் மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான், கனடா உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளன.
(Visited 13 times, 1 visits today)