வெளிநாடு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 24 இலங்கையர்கள்!

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலங்கையர்கள் 24 பேர் குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 24 பேரில் இலங்கையின் பிரபல பாடகர்கள் சிலரும் அதனை ஏற்பாடு செய்த குழுவினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தூதரகத்துடன் கலந்துரையாடி அவர்களை மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டி கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.
“எதெர அபி” அமைப்பினால் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 41 times, 1 visits today)