SLvsIND – இலங்கை அணிக்கு 138 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணிக்கு 138 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
(Visited 53 times, 1 visits today)