கேரள மண்சரிவு – 120 பேர பலி, 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்குப் பிறகு நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எனவும், அவர்கள் அவர்களது குடும்பங்கள் சிறிய வீடுகளில் அல்லது தற்காலிக வீடுகளில் வசித்து வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 இந்திய ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.