பிரான்ஸில் ஒலிம்பிக் தொடக்க விழா தவறுகள் – மன்னிப்புக் கேட்ட ஏற்பாட்டுக் குழு
பிரான்ஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது சில தவறுகள் நடத்துள்ளது.
இதற்காக ஏற்பாட்டுக் குழு மன்னிப்புக் கோரியுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஓர் அங்கம் கிறிஸ்தவர்களை அவமதிப்பதுபோல் அமைந்ததாகக் குறைகூறப்பட்டது.
எவரையும் புண்படுத்தும் நோக்கில் தொடக்கவிழாவில் அந்த அங்கம் சேர்க்கப்படவில்லை என்று ஏற்பாட்டுக் குழு தெளிவுபடுத்தியது.
தென் சூடானுக்காகச் சிறிது நேரம் சூடானின் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது. அந்த இரண்டும் தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்து 10 ஆண்டுக்கு மேலாகிவிட்டது.
தவறான தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டதற்கும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வருத்தம் தெரிவித்தது.
(Visited 6 times, 1 visits today)