வடகொரியாவில் அவசர நிலை பிரகடனம்!

சீரற்ற காலநிலை காரணமாக வடகொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சினுய்ஜூ (Sinuiju) மற்றும் உய்ஜூ ஆகிய நகரங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
அந்த நகரின் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக 4,200க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளை அந்த நாட்டின் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய இயற்கை பேரழிவுகள் வட கொரியாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற தற்போதைய பிரச்சினைகளை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கையில் உயிர்ச்சேதங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
(Visited 46 times, 1 visits today)