உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு – பில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு
உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் “வெப்ப தொற்றுநோயை” அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வெளியிட்ட அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண நாடுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த வெப்பமான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த ஜூலை 2023 இல் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்திய அறிக்கை, உலகளாவிய தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் (2.4 பில்லியன் மக்கள்) தற்போது தீவிர வெப்பநிலையின் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று கூறுகிறது.