யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் நண்பருடன் தங்கியிருந்த வேளை காலை நெஞ்சு வலிப்பதாக நண்பரிடம் கூறி சில நிமிடங்களில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)