சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை : மருந்துகளை எடுத்துச் செல்லும்போது கவனம் தேவை!
பிரித்தானியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மருந்துச் சீட்டு மற்றும் கடையில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு செல்வதால் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் கோடை விடுமுறை வருகின்ற நிலையில் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் வெயிலின் தட்பவெப்பநிலைக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சில பயணிகள் தங்களுடன் எந்த மருந்துச் சீட்டு மற்றும் கடையில் கிடைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கீழ் வரும் மருந்துகளை எடுத்துச் செல்பவர்கள் அதிக கவனத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Opioids
Antihistamines
Codeine
Sleeping pills
Fixed-dose combinations
25 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓபியாய்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஹாட்ஸ்பாட்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கோடீன் போன்ற ஓவர்-தி-கவுன்டர் மருந்துகள் அடங்கும்.
அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் சில மருந்துகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.