இஸ்ரேலை குறிவைத்து தாக்கிய ஹவுதிகள் : அதிகாலையில் பதற்றம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் இன்று (19.07) காலை நீண்ட தூரம் சென்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு லெபனானில் நடந்த தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் உயர்மட்ட கெரில்லா தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
(Visited 61 times, 1 visits today)