இலங்கையில் மற்றுமொரு சர்வதேச விமான நிலைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காகக் கடந்த பாதீட்டில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த ஓடுபாதை விரிவாக்கம் இலங்கை விமானப்படை (SLAF) ஹிங்குராக்கொட தளத்தின் எல்லைக்குள் நிகழும், .
SLAF ஆல் ஆறு மாதங்களில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)