தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு – முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டின் முற்றத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வௌியாகவில்லை.
தம்மிக்க நிரோஷன் என்ற குறித்த நபர், 2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரபல பாடசாலை ஒன்றின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)