விவசாயத்தில் அசத்தும் பொறியியல் மாணவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காயிரம் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாபெரும் கண்காட்சி விழா சவிதா பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பல்வேறு முன்னணி தொழில் நிறுவனர்கள் , உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளை விளக்கினர்.
குறிப்பாக பொறியியல் படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் வெண்டைக்காய் பயிர் செய்து உற்பத்தியை பெருக்கி விவசாயத்தில் அசத்தியுள்ளனர்.
டிரோன் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது என்பதை ஆராய்ச்சி செய்து விவசாயிகள் எவ்வாறு பயன்பெறலாம் என்பதையும் கண்காட்சியில் பங்கேற்று விளக்கி கூறினர்.