சோமாலியாவில் யூரோ 2024 இறுதிப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இரசிகர்களுக்கு நேர்ந்த துயரம்!

சோமாலியாவில் பிரபலமான ஓட்டலுக்கு வெளியே வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது ஐந்து கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யூரோ 2024 இறுதிப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் கூடியிருந்தபோது மொகாடிஷுவில் உள்ள டாப் காபியில் வெடிகுண்டு வெடித்ததை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 20இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. எனினும், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஜிஹாதிஸ்ட் குழு அல்-ஷபாப் தெரிவித்துள்ளது.
(Visited 31 times, 1 visits today)