ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

மெல்போர்னின் டோன்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தின் போது வீட்டினுள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
(Visited 54 times, 1 visits today)