செய்தி தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்பனையில் மூன்று பேர் கைது

கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அஷ்யா கேரளா லாட்டரி சீட்டுகள், காருண்யா கேரளா லாட்டரி சீட்டுகள், ஸ்திரி சக்தி கேரளா லாட்டரி சீட்டுகள் என லாட்டரி சீட்டு விற்பனையில் மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேரூர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் கோவையை சேர்ந்த தங்கராஜ்(42), அய்யாசாமி(48), ஐயப்பன்(48) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!