இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பானபேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகவும், இஸ்ரேலின் நிலைப்பாடு தெளிவற்றதாக இருந்தாலும் திருத்தங்கள் சாதகமான பதிலைப் பெற்றுள்ளதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
இம்மாதம் வாஷிங்டனில் இஸ்ரேல் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)