121 பேரைக் கொன்ற ஹத்ராஸ் சம்பவம் – ஜப்பான் பிரதமர், புடின் இரங்கல்
உத்திரபிரதேசத்தில் மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகமான கூட்ட நெரிசல் குறித்து ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின்,நடந்த சோகமான விபத்துக்கு மிகவும் நேர்மையான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் கிஷிடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன் என்று கூறியுள்ளார்.
“ஜப்பான் அரசின் சார்பாக, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.