கரீபியன் கடற்பகுதியை தாக்கும் சூறாவளி : விமான நிலையங்களை மூட நடவடிக்கை!
கரீபியன் கடற்பகுதியில் மிகப் பெரிய சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அண்டிய நாடுகளில் உள்ள வானிலை அலுவலகங்கள் பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளன.
இதன்காரணமாக ஜமைக்கா உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் உள்ளூர் மற்றும் சர்வதேச வானிலை அறிவிப்புகளை நீங்கள் பின்பற்றி கண்காணிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளின் ஆலோசனைகளை கவனிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புயலானது ஆரம்பத்தில் தென்கிழக்கு கரீபியனில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் ஜமைக்கா மற்றும் கேமன் தீவுகளுக்கு அருகில் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)