தென்கொரியாவில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் Samsung நிறுவன ஊழியர்கள்

தென்கொரியாவில் Samsung Electronics நிறுவன ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான Samsung தொழில்துறை நடவடிக்கைக்கு எதிராக வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
அதில் எவ்வளவு பேர் கலந்துகொள்வர் என்பதை ஊழியர் சங்கம் தீர்மானிக்கும் என்று அதன் பிரதிநிதி ஒருவர் கூறினார்.
போனஸ், நேர விடுப்பு ஆகியவற்றில் வெளிப்படையான அணுகுமுறை தேவை என்றும், ஊழியர் சங்கம் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும் அதன் தலைவர் வலியுறுத்தினார்.
ஊழியர் வேலைநிறுத்தம் குறித்து Samsung நிறுவனம் கருத்துச் சொல்ல மறுத்துவிட்டது.
(Visited 11 times, 1 visits today)