இலங்கையில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை பொறிமுறையை தயாரிப்பது தொடர்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு குறிப்பிட்ட மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையை, மருந்தளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட உள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 59 times, 1 visits today)