உருகுவே சென்ற Air Europa விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் பலர் காயம்

மட்ரிட்டிலிருந்து உருகுவே தலைநகர் Montevideo-வுக்கு சென்றுகொண்டிருந்த Air Europa விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
Boeing 787-9 Dreamliner விமானத்தில் பயணிகள் 325 பேர் இருந்தனர்.
அந்த விமானம் பிரேசிலில் தரையிறக்கப்பட்டது. அங்கு அவசர மருத்துவ வாகனங்கள் தயாராக இருந்தன.
40 பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
காயமடைந்தவர்கள் ஸ்பெயின், அர்ஜெண்டினா, உருகுவே, இஸ்ரேல், பொலிவியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
(Visited 32 times, 1 visits today)