இலங்கை செய்தி

மாங்குளம் விபத்து – சிகிச்சை பெற்றுவந்த மற்றையவரும் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(29) உயிரிழந்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR )பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 25ம் திகதி நடந்தமாங்குளம் விபத்தினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,

பேருந்து மீது வீதியில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்ட நாளில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை