இலங்கையில் காணாமல் போன இஸ்ரேலிய யுவதியை கண்டுபிடித்த இராணுவத்தினர்

இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இஸ்ரேலிய யுவதி நிலாவெளி பிரதேசத்தின் வனாந்தரப் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த யுவதி தவறி வீழ்ந்த நிலையில் மலையோரத்தில் சிக்கிக் கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
25 வயதான தாமர் அமிதாய் எய்டன் தீவு தேசத்தின் வழியாக தனியாக பயணம் செய்தார், கடந்த நான்கு நாட்களாக அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்க்பபட்டுள்ளார்.
இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான திருகோணமலைக்குச் சென்ற அவர், அவர் தங்கியிருந்த ரோலக்ஸ் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பவில்லை என கூறப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
(Visited 45 times, 1 visits today)