ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் இவ்வாண்டின் முதல் கால் ஆண்டில் வீட்டு விலைகளில் மீண்டும் குறைந்துள்ளது என ஜெர்மனியின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் 2024 இன் முதல் காலாண்டில் குடியிருப்பு சொத்துக்களின் விலை வீழ்ச்சியடைந்து. அது தொடர்ந்தும் கீழ் நோக்கிச் செல்கிறது.
ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2024 முதல் மூன்று மாதங்களில் உள்நாட்டு சொத்து விலைகள் மேலும் சரிவதைக் காட்டுகிறது.
2023 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது ஜனவரி முதல் மார்ச் வரையிலான சொத்து மதிப்புகள் 1.1% குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து ஆறாவது காலாண்டின் தொடர் சரிவாக காணப்படுகின்றது. விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 5.7% குறைந்துள்ளது.
ஜேர்மனியின் ஏழு பெரிய நகரங்களான பேர்லின், ஹம்பேர்க், முன்சன், கேளின், பிரான்போர்ட் – மைன், ஸ்ருட்காட் மற்றும் டுசில்டோர்வ் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது.
இந்த நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 12 மாதங்களில் சராசரியாக 4.6% குறைந்துள்ளது.