ஆசியாவின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு காரணமாகிய இந்தியர்கள்
ஆசிய நாடுகளுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாகவும், சில நாடுகளில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவதில் தாய்லாந்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தும் போதே தைவான் பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு முறையான முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தைவான் உள் விவாதங்களை நடத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 175,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.