இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் விற்பனைக்கு
வெலிமடையில் சற்று பழுத்த பச்சை மிளகாயை பயன்படுத்தி ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வெலிமடையைச் சேர்ந்த லசந்த ருவான் லங்காதிலக என்பவரால் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் லசந்த ருவான் லங்காதிலக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தனது தயாரிப்பை அறிமுகப்படுத்தினார்.
கல்கிரியாகமா மற்றும் வெரனியா எனப்படும் 2 மிளகாய் வகைகளின் கலப்பினமாக தயாரிக்கப்பட்ட Mich Hy 1 மிளகாய் வகையை பயன்படுத்தி, பொதுவாக பழுத்த மிளகாயின் கூழ் வடிவில் மற்றும் பசுவின் பால் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி இந்த வகை ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தயாரிப்புக்கான காப்புரிமை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு சிறிய கோப்பை ஐஸ்கிரீம் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் லசந்த ருவான் லங்காதிலக்க தெரிவித்துள்ளார்.