காசாவில் அகதிகள் முகாமை குறிவைத்து கொடூரமாக தாக்கிய இஸ்ரேல் : கொன்று குவிக்கப்பட்ட மக்கள்!

காசா நகரில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அல்-ஷாதி பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதி போரில் தப்பியோடியவர்களின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அல்-துஃபா மாவட்டத்தில் உள்ள வீடுகளை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடக்கு மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன நகரமான கல்கிலியாவில் இஸ்ரேலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 30 times, 1 visits today)