யாழில் இருந்து வந்த லொறி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்றும் எரிபொருள் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிந்தலை – பலுகஸ்வெவ பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காய்கறி லொறியின் சாரதியும் லொறி உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த லொறி சாரதியும் உதவி சாரதியும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் பின்புறத்தில்மோதியதில்லொறி வீதியின் குறுக்கே கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரக்கறி லொறியின் சாரதி உறங்கியமையினால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் வாகனப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.