தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் மம்மிகள் : குழப்பத்தில் ஆய்வாளர்கள்!
ஏலியன்கள் என விவரிக்கப்படும் இரு மம்மிகள் தென்னமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளன. இதனை ஆய்வுக்கு உட்படுத்த பெருவியன் அராசங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
UFO நிபுணரான ஜெய்ம் மௌசன், திய மாதிரிகளில் ’30 சதவீதம் தெரியாத’ டிஎன்ஏ உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெருவியன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மம்மிகள், அவற்றில் ஒன்று கர்ப்பமாக இருப்பதாகத் தெரிகிறது எனக் கூறியுள்ளனர்.
ஆகையால் இவர்கள் பண்டைய மனிதர்களாக இருக்கலாம் என தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.
வேற்றுக்கிரவாசிகள் மனிதர்களிடையே இருக்கலாம் என்ற வாதம் எழுந்ததை தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது.
வெளிக்கொணரப்பட்ட இரண்டு உருவங்கள் வேற்றுகிரகவாசிகள்-மனித கலப்பினங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறித்த மம்மிகளின் அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஆரம்ப பரிசோதனைகள் இந்த வருடத்தின் (2024.03) அன்று மேற்கொள்ளப்பட்டன.
மெக்சிகன் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு மெக்சிகன் காங்கிரஸின் விசாரணையில் மற்ற இரண்டு வேற்றுகிரகவாசிகளின் உடல்களை பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையின் அடையாளமாக வழங்கியபோது புகழ் பெற்றார்.
பெருவின் பல்பா மற்றும் நாஸ்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மம்மிகள் வேற்று கிரக வாழ்க்கைக்கான சான்று என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.