சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
தெற்கு சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா முழுவதும் பல வாரங்களாக கடுமையான வானிலை நிலவியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் அடர்த்தியான குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Meizhou நகருக்கு அருகே இயற்கை பேரழிவுகளில் “ஐந்து பேர் இறந்துள்ளனர், 15 பேர் காணவில்லை” என்று மாகாண அதிகாரிகளை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 13 பேர் “சிக்கப்பட்டுள்ளார்கள்” ஆனால் அவர்களின் நிலைமைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.
அதிகாரிகள் 10,000 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு “விரைவாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தொடங்க” அனுப்பியுள்ளனர்.