வாடகை வருமான வரி : இலங்கை நிதி அமைச்சகம் விளக்கம்!
வாடகை வருமான வரி குறித்து விளக்கம் அளித்து நிதி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச சொத்து வரியானது ‘கட்டண வாடகை வருமான வரி’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தவறான கருத்துக்கள் எழுந்துள்ளமை உரிய அறிவிப்பில் காணப்படுகின்றது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரி விதிப்பில் கவனம் செலுத்துவது சாதாரண வருமானம் ஈட்டுபவர்கள் மீது அல்ல, அதிக சொத்துக்கள் உள்ளவர்கள் மீதுதான் என்று கூறுகிறது.
இவ்விடயத்தை விளக்கி நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.