யூரோ 2024 கால்பந்து போட்டியை காண திரண்ட இரசிகர்கள் மத்தியில் பதற்றம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யூரோ 2024 கால்பந்து போட்டியை காண பெரும்பாலான இரசிகர்கள் நேற்று (15.06) குவிந்திருந்த நிலையில், கலவரம் வெடித்துள்ளது.
நேற்றைய போட்டியில் இத்தாலியும் அல்பேனியாவும் மோதியபோது டார்ட்மண்ட் மற்றும் பெர்லின் ஆகிய இரு இடங்களிலும் வன்முறைகள் வெடித்துள்ளன.
100 அல்பேனிய அல்ட்ராக்கள் கருப்பு உடை அணிந்து இத்தாலிய ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் நடவடிக்கை பின்னர் கலவரமாக மாறியதை அடுத்து அதனை கட்டுப்படுத்த பொலிஸாரும், கலக தடுப்பு பிரிவினரும் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மைதானத்திற்கு வெளியேயும், பல்வேறு சாலை மற்றும் ரயில் வழித்தடங்களுக்கான சந்திப்பு இடங்களிலும் ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் சில விஷமிகளால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)