பிரபல ஐரோப்பிய நாட்டை விட்டு வெளியேறும் 40 சதவீத வெளிநாட்டவர்கள்
ருமேனியாவ விட்டு சுமார் 35-40 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சேர்ப்பு முகவர் பிரதிநிதிகளின் தரவுகளுக்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு மேலதிகமாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படும் ருமேனினிய முதலாளிகளை இத்தகைய நிலைமை பாதித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் ஐரோப்பாவில் சிறந்த ஊதியம் பெறும் வேலைகளை தேடுவதற்காக ருமேனியாவை விட்டு வெளியேறுகிறார்கள் என “Work from Asia” என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பொது மேலாளர் Yosef Gavriel தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் பெறுவதை விட அதிக பணம் சம்பாதிக்க விரும்புவதால், நாட்டில் எங்களிடம் கூட வராத தொழிலாளர்களைப் பற்றி நாங்கள் இங்கு பேசுகிறோம். எங்கள் மதிப்பீட்டின்படி, ருமேனியா ஷெங்கனில் நுழைந்த நாளிலிருந்து, இப்போது வரை, ஏறக்குறைய 35-40% வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ருமேனிய பணி அனுமதி பெற்றவர்கள் மற்ற ஷெங்கன் நாடுகளில் பணிபுரிய உரிமை இல்லை. அவர்கள் எந்த 180 நாள் காலத்திற்குள் 90 நாட்கள் வரை தங்குவதற்கு பார்வையாளர்களாக எந்த ஷெங்கன் நாட்டிலும் நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.