இத்தாலியில் £1 விற்பனை செய்யப்படும் வீடுகள் : குவியும் வெளிநாட்டினர்!

இத்தாலியின் அழகிய கிராமம் ஒன்றில் உள்ள வீடுகளை ஒரு பவுண்ட்ஸிற்கு விற்பனை செய்த பிறகு கிராமம் மீளவும் புத்துயிர் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய பிராந்தியமான சிசிலியில் உள்ள சம்புகா டி சிசிலியாவில் இப்போது அதிகமான வீடுகள் வெறும் £2.50க்கு சமமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கிராமத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரான Giuseppe Cacioppo, வெளிநாட்டினர் குறிப்பாக வீடுகளை எடுக்க ஆர்வம் காட்டுவதாக நம்புகிறார்.
இது 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 250 வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டின் பலர் வீடுகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
(Visited 22 times, 1 visits today)