ஜெர்மனியில் லட்ச கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு
ஜெர்மனியில் லட்ச கணக்கான பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையானது நிலவி வருகின்றது. இதனை ஈடு செய்வதற்கு பல வெளிநாட்டவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகளில் 120000 தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுவதாக பாலர் பாடசாலையின் நிர்வாகமானது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது கடந்த 2023 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டுகளில் மொத்தமாக இவ்வகையான பற்றாக்குறை நிலவுவதற்காக 4 பில்லியன் யுரோக்களை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் உடனடியாக மத்திய அரசாங்கமானது இந்த விடயம் தொடர்பில் அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)