கோலாகலமாக ஆரம்பமாகியது இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு தற்போது டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிராந்திய அரசாங்க தலைவர்கள் குழுவும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்திய பொதுத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் ஜூன் 4 ஆம் திகதி வெளியாகியது.
642 மில்லியன் மக்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.
அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உள்ள 543 இடங்களில் 293 இடங்களை சொந்தமாக்கிக் கொண்டது.
இந்திய வரலாற்றில் 3 முறை பிரதமராக பதவியேற்று ஆணை பெற்ற இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)