ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் மில்லியன் கணக்கானவர்கள் வாக்குப்பதிவு: இறுதி நாள் இன்று
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் இறுதி நாளில் லட்சக்கணக்கானோர் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இன்று 9 ஆம் திகதி, பிரான்ஸ், இத்தாலி, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோசியா, சைப்ரஸ், டென்மார்க், கிரீஸ், ஹங்கேரி, லிதுவேனியா, லக்ஸம்பேர்க், போலந்த், போர்துக்கல், ரொமேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இடம்பெறுகிறது.
இன்று வாக்களிக்கும் நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற மூன்று பெரிய பொருளாதாரங்களான ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை உள்ளன.
400 மில்லியன் ஐரோப்பிய மக்கள் இம்முறை வாக்குப்பதிவு செய்ய தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் நடைபெறும் முதல் ஐரோப்பிய தேர்தலில், நாடாளுமன்றத்திற்கு 720 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொள்ளும் வெளிப்புற சவால்களில் சீனா மற்றும் அமெரிக்காவின் தொழில்துறை போட்டி, ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் என்பன அடங்கும்.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல முக்கிய அரசியல் சவால்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.