இலங்கையில் சீரற்ற வானிலையால் 5000இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
இலங்கையின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மொத்தமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அவற்றில், 56 வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன, 5,531 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று டிஎம்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் போது காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16 என, DMC இன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இடம்பெயர்ந்த 7,639 பேர் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 1,973 நிவாரண நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.