50இற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் ஆற்றில் பாய்ந்த பேருந்து : சிரியாவில் துயரம்!

சிரியாவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன், 20 குழந்தைகள் மீட்கப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவின் டார்குஷ் அருகே ஒரோன்டெஸ் ஆற்றில் பள்ளி பேருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிரிய சிவில் டிஃபென்ஸ், தன்னார்வத் தொண்டர்கள் குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)