உலகின் மிகப் பெரிய செல்வந்தரின் அடுத்த வாரிசு யார்? 5 பிள்ளைகளின் நிலை என்ன
உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பெர்னார்ட் ஆர்னால்ட் LVMH நிறுவனத்தை வழி நடத்த 5 பிள்ளைகளில் யாரைத் தெரிவுசெய்வார் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் Louis Vuitton, Christian Dior எனப் பல்வேறு சொகுசுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் LVMH நிறுவனத்தின் மதிப்பு 480 பில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.
அதன் உரிமையாளரான ஆர்னால்டிற்கு 74 வயது. அவரின் 5 பிள்ளைகளும் சிறு வயதிலிருந்து வர்த்தகத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.
தற்போது LVMH நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். ஒரு மகள் 4 மகன்கள் உள்ளனர்.
48 வயது மகளான டெல்ஃபின் ஆர்னால்ட் ஜனவரி மாதம் Christian Dior நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 45 வயது மகன் அன்ட்டோயின் ஆர்னால்ட் LVMH கீழ் இயங்கும் ஒரு முக்கியமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகும்.
மற்ற 3 மகன்களும் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களில் யார் LVMH நிறுவனத்தை வழி நடத்துவார்? அது திறனுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் முடிவுசெய்யப்படும் என ஆர்னால்ட் தெரிவித்துள்ளார்.