டி20 உலகக் கோப்பை 2024: 35 வயதிற்கு மேல் விளையாடும் 10 வீரர்கள்…
நியூசிலாந்து வீரரான டிம் சௌதிக்கு தற்போது வயது 35 ஆகும். பந்துவீச்சாளரான இவர் 123 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளர்.
இந்திய வீரர் விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. பேட்டரான இவர் 117 போட்டிகளில் 4037 ரன்களை குவித்துள்ளார்.
மேற்கு இந்திய வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு தற்போது 35 வயதாகிறது. ஆல்ரவுண்டரான இவர் 76 போட்டிகளில் விளையாடி 970 ரன்களையும், 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் வயது 36 ஆகும். விக்கெட் கீப்பிங் பேட்டரான இவர் 85 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1175 ரன்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் மொயின் அலிக்கு வயது 36 ஆகும். ஆல்-ரவுண்டரான இவர் 85 போட்டிகளில் விளையாடி 1158 ரன்களையும், 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் வயது 36 ஆகும். ஆல்-ரவுண்டரான இவர் 88 டி20 போட்டிகளில் விளையாடி 1370 ரன்களையும், 45 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வயது 37 ஆகும். பேட்டரான இவர் 151 போட்டிகளில் விளையாடி 3974 ரன்களை அடித்துள்ளார்.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் முகமதுல்லா ரியாத்தின் வயது 38 ஆகும். இவர் 131 சர்வதேச டி20 போட்டிகளில் 2298 ரன்களை அடித்துள்ளார். 39 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு வயது 39 ஆகும். இவர் 131 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2101 ரன்களையும், 93 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
உகாண்டா வீரர் ஃபிராங்க் நசுபுகா வயது 43 ஆகும். இவர் 53 சர்வதேச டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 158 ரன்களையும் எடுத்துள்ளார்.