ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தீவிரம் – விண்ணப்பித்தவர்களுக்கு நெருக்கடி

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு முற்றாக நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துகின்ற நடவடிக்கையானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் ஜெர்மனியில் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட அகதிகளில் 4800 க்கு மேற்பட்டவர்களை கட்டாயத்தின் பெயரில் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
குறித்த நடவடிக்கையானது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது 3 இல் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துருக்கி நாட்டில் இருந்து வந்தவர்களில் 449 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஜோர்ஜியா நாட்டை சேர்ந்தவர்கள் 416 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் சேர்வியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனிய நாட்டில் 7000க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் காணப்பட்ட பொழுது அதிகாரிகளால் இவர்களை கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டதாகவும், புள்ளி விபரத்தில் குறிப்பிடத்தக்கது.