ரஷ்யா-வடகொரிய ராணுவ ஒத்துழைப்புக்கு ஆதாரம் இருக்கிறது – தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர்
ரஷ்யாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு இருப்பதற்கான அதிக ஆதாரங்கள் இருப்பதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதங்கள் வடகொரியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆதாரங்களிலிருந்து இது தெரிய வருவதாக தென்கொரிய அமைச்சர் ஷின் வன்-சிக் குறிப்பிட்டார்.
ரஷ்யா-வடகொரியா ராணுவ ஒத்துழைப்பால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்ர்.
இதற்கு கைமாறாக, ரஷ்யாவிடமிருந்து வடகொரியா தொடர்ந்து ராணுவ தொழில்நுட்பங்களைப் பெற்று அதன் ராணுவ ஆற்றல் மேம்பட்டால் உடனடி ஆபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
கொரிய தீபகற்பத்தை ராணுவமற்ற வட்டாரமாக மாற்றுவதற்கு சீனா கூடுதலாக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தென்கொரியா சொந்தமாக அணுவாயுதங்களை பெற முயற்சி செய்யுமா என்று கேட்டதற்கு உலகளாவிய அணுவாயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தை நம்புவதாக அவர் கூறினார்.
அதே சமயத்தில் வடகொரியாவின் அணுவாயுதங்களுக்கு அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான வலுவான கூட்டணியே பதில் என்றார் அவர்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் பங்கேற்று பேசிகையில் இதனை தெரிவித்தார்.