இலங்கை: எரிபொருள் விலை குறைப்பு! பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
குறித்த விலை திருத்தத்துடன், லங்கா ஐஓசி நிறுவனமும் அதன் விலைகளை திருத்திய நிலையில், சினோபெக் நிறுவனமும் அதன் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவித சாத்தியம் இல்லை என தனியார் பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பஸ் கட்டணத்தை குறைக்க இந்த திருத்தம் போதுமானதாக இல்லை என லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
“எனினும், அரசாங்கம் உத்தேச பயண அட்டை முறையை அமல்படுத்தினால், நாங்கள் உடனடியாக பேருந்து கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இதேவேளை, குறைக்கப்பட்ட எரிபொருள் விலைச் சலுகை தமது சேவைகளுக்கு கிடைக்காத காரணத்தினால் கட்டணத்தை குறைக்கப் போவதில்லை என இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.