ஆஸ்திரேலியா – இஸ்ரேலுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த கோரி பொது ஊழியர்கள் கோரிக்கை கடிதம்
பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் உடந்தையாக இருப்பதாக பொது ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், இஸ்ரேலுக்கான அனைத்து இராணுவ ஏற்றுமதிகளையும் கான்பெரா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
பிரதம மந்திரிக்கு ஒரு பொதுக் கடிதத்தில், 350-க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அந்தோனி அல்பானீஸ் “ஆஸ்திரேலியாவை கூடுதல் இனப்படுகொலைக்கு உடந்தையாக வழிநடத்துகிறார், கூடுதல் காலனித்துவ திட்டத்தில் இந்த தேசத்தை அதிக போர்க்குற்றங்களால் கறைப்படுத்துகிறார்” என்று அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் பொது ஊழியர்கள் உள்ளூர், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி பாராளுமன்றத்தில் சட்டமியற்றுபவர்கள் சுதந்திர பாலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான பிரேரணையை தடுத்த ஒரு நாளுக்குப் பிறகு பொதுக் கோரிக்கை வந்துள்ளது.பிரேரணைக்கு ஆதரவகா பசுமைக் கட்சில் ஐந்து வாக்குகளும், எதிராக 80 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
“இஸ்ரேலுக்கான அனைத்து இராணுவ ஏற்றுமதிகளையும் உடனடியாக நிறுத்துவதன் மூலம் பாலஸ்தீனத்தின் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தத் தவறிய அரசு அதிகாரிகள், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைச் செயல்களுக்கு உதவுதல் மற்றும் ஊக்குவிப்பதற்காக குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் எச்சரிக்கைகளை மேற்கோள் காட்டி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.