ஐஸ்லாந்தில் சீறி பாய்ந்த எரிமலை!

ஐஸ்லாந்தில் உள்ள கிரின்டாவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
Reykjanes தீபகற்பத்தில் உள்ள Sundnúkar பள்ளங்களுக்கு அருகில் நில அதிர்வு நடவடிக்கைகள் அதிகரித்ததால் எரிமலை வெடிக்கும் என நிபுணர்கள் முன்பே எதிர்வுக்கூறியிருந்தனர்.
இதற்கமைய அப்பகுதியில் இருந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
வானிலை அலுவலகத்தின் சமீபத்திய புதுப்பிப்பில் எரிமலை வெடித்து 50 மீற்றர் உயரத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)