நிலச்சரிவால் பப்புவா நியூ கினியாவில் 2ஆயிரம் பேர் பலி ; இந்தியா 1 மில்லியன் டொலர் நிதியுதவி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவால் 2 ஆயிரத்திற்கும் மேட்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென் பசிபிக் தீவு நாடான இங்குள்ள எங்கா மாகாணத்தின் யம்பலி கிராமத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் புதையுண்டதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என பப்புவா நியூகினியா தேசிய பேரிடர் மைய இடைக்கால இயக்குநர் லுசேட்டா லாசோ மனா, ஐ.நா. ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பேரிடருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு,இந்தியாவின் சார்பில் நிவாரண உதவியாக 1 மில்லியன் டொலர் நிதியுதவி உடனடியாக வழங்கப்ப்டுவதாக அறிவிக்ப்பட்டுடுள்ளது.
அங்குள்ள மண்ணுக்கடியில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ,பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.