சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நெருக்கடியில் சுகாதார பிரிவினர்
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
கொரோனா நோயாளிகளைச் சமாளிக்க உள்ளூர் மருந்தகங்களில் மனிதவளத்தையும் மருந்து மாத்திரைகளின் இருப்பையும் அதிகரித்துள்ளன.
சளி, இருமல் ஆகியவற்றால் அவதிப்படுவோர் எண்ணிக்கையும் கூடியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
கடந்த மாதத்தைவிட ஒரு மடங்கு கூடுதலான கொரோனா நோயாளிகளுக்கு UniHealth மருந்தகம் இம்மாதம் சிகிச்சையளித்தது.
மருந்தகத்தின் 3 கிளைகளில் நாள்தோறும் சுமார் 20 கோவிட் நோயாளிகள் வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் மருந்து மாத்திரைகளை மருந்தகம் சேர்த்து வைக்கிறது.
அடுத்த இரண்டிலிருந்து 4 வாரங்களுக்கு இன்னும் பலரிடம் கோவிட் கிருமி காணப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலை விடுமுறைக்காகப் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவருவதால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இணையம்வழி சேவை வழங்கும் WhiteCoat மருத்துவ நிறுவனம் ஏப்ரலுடன் ஒப்புநோக்க இந்த மாதம் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்ததாகச் சொன்னது.
மக்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க அவ்வப்போது கைகளைக் கழுவி முகக்கவசம் அணியும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.